கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கிராஞ்சி இலவன்குடா பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கடலட்டை பண்ணை விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோதமாக அமைக்கப்படும் கடலட்டை பண்ணையால் தமது தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கே பெரும் கஸ்ர துன்பங்களை எதிர் நோக்கி வருவதாகவும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென கோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிரிந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதற்கமைய நீரியல் வள் திணைக்கள அதிகாரியையும் முறைப்பாட்டாளர்களையும் அழைத்து ஆணைக்குழு இன்றையதினம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும் வாழ்வாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தம்மை எவரும் கண்டுகொள்வதில்லை என ஆதங்கத்தை வெளியிட்டுள்ளதுடன் தமக்கான நீதியை பெற்றுத்தர அனைத்து தரப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment