யாழில் தொழிற்சந்தை - Yarl Voice யாழில் தொழிற்சந்தை - Yarl Voice

யாழில் தொழிற்சந்தையாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து இன்றைய தினம் தொழிற்சந்தை ஒன்றினை நடாத்தினர்.

இந்த தொழிற்சந்தையானது யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்திருந்த நிலையில் தொடர்ந்து பி.ப 1.30 மணி வரை இடம்பெற்றது. இது நாளை ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் , யாழ்ப்பாண மாவட்ட செயலக அதிகாரிகள்,மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,தொழில் வழங்கும் தொழில் தரகர்கள்,தொழில் பெறுவதற்காக வந்த இளைஞர்கள் ,யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post