யாழ்.மாநகர சபை நடாத்தும் "முதல்வர் கிண்ண சதுரங்கச் சுற்றுப்போட்டி – 2022" இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வானது யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரியில் காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றுப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற பெரும் போட்டியாக நடைபெறுகிறது.
அத்துடன் 14 பிரிவுகள் பிரித்து நடாத்தப்பட்டு 14 பிரிவுகளுக்கும் முதல்வர் கிண்ணம் வழங்கப்படும்.
இப்போட்டியின் தொடர்ச்சி நாளைய தினமும் நடைபெற்று வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment