ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!! யாழில் பரபரப்பு - Yarl Voice ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!! யாழில் பரபரப்பு - Yarl Voice

ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்..!! யாழில் பரபரப்புயாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும் ஆசிரியரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார். 

அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளான். 

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தினை சில தரப்பினர் இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலையாக காண்பிக்க முயற்சித்து வருவதாகவும் , அதனால் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post