யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் புதிய அலுவலக தொகுதி திறந்து வைப்பு - Yarl Voice யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் புதிய அலுவலக தொகுதி திறந்து வைப்பு - Yarl Voice

யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் புதிய அலுவலக தொகுதி திறந்து வைப்பு
யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் அலுவலகத் தொகுதி திறப்பு விழா  கல்லூரியின் முதல்வர்  லலிதாமலர் முகுந்தன் தலைமையில்  இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன், ஐக்கிய இராச்சியம் பழைய மாணவர் சங்க செயலாளர் க.ஜெகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பழைய மாணவர் சங்கத்தின் 40 இலட்சம் நிதி அனுசரணையில் 20 அடி அகலமும் 40 அடி நீளமும் கொண்ட  இரண்டு வகுப்பறைத் தொகுதிகள் அலுவலகத் தொகுதியாக புனரமைக்கப்பட்டு  விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post