யாழ்ப்பாண புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் சேவைகள் ஆரம்பம் - Yarl Voice யாழ்ப்பாண புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் சேவைகள் ஆரம்பம் - Yarl Voice

யாழ்ப்பாண புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் சேவைகள் ஆரம்பம்



யாழ்.நகரப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந் அனைத்து உள்ளுர் மற்றும் வெளியூருக்கான தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று காலை மாநகர முதல்வர் வி.மணிவணணன் , ஆணையாளர் இத.ஜெயசீலன், தனியார் பஸ் சங்கங்களில் தலைவர் பிரதிநிகள் பொலிசார் இது தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டதுடன் தற்போது ஏற்படுகின்ற சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது. 

யாழ்.நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது சேவைகளை ஆரம்பித்த அனைத்து தனியார் சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கும் யாழ்ப்பாண போக்குவரத்து பொலிசாருக்கும் மாநகர முதல்வர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்

தற்போதைய போக்குவரத்து சேவகைளில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை இனங்கண்டு அடுத்த வாரம் அது தொடர்பில் ஆராய்ந்து இத் திட்டத்தனை மேம்படுத்துவதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post