ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சங்கமம் - தாயாரின் மறைவு குறித்து மோடி உருக்கம் - Yarl Voice ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சங்கமம் - தாயாரின் மறைவு குறித்து மோடி உருக்கம் - Yarl Voice

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சங்கமம் - தாயாரின் மறைவு குறித்து மோடி உருக்கம்
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியைச் சேர்ந்துள்ளது என்று தனது தாயாரின் (ஹீராபென் மோடி - வயது 100) மறைவு தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.

100 ஆவது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விடயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கின்றது" - என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post