கடலட்டைபண்ணை வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டம் - Yarl Voice கடலட்டைபண்ணை வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டம் - Yarl Voice

கடலட்டைபண்ணை வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டம்கடலட்டைப் பண்ணையை வேண்டுமென வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டது. 

சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள்  கலந்து கொண்ட இந்தப் பேரணி  பண்ணை கடற்கரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை 
சென்றடைந்து அங்கிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்தது. 

பேரணியின் நிறைவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கான மகஜர் கடற்றொழில் அமைச்சரின் 
பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. 

கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தினை பெறமுடியாத நிலையில் நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய கடலட்டைப் பண்ணை தங்களுக்கு வேண்டுமென வலியுறுத்தியே கடற்றொழிலாளர்களால் போராட்டம் இடம்பெற்றது. 

பேரணியில் கலந்து கொண்டோர் கடலட்டை பண்ணை தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாகவும் கண்டனத்தினை வெளிப்படுத்தினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post