மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி2022 ல் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்ற சிறைச்சாலைகள் கராத்தே அணி வீரருக்கு யாழ்ப்பாண சிறைச்சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது
மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி2022 யில் இலங்கை சிறைச்சாலைகள் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது
மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி2022 வென்னப்புவ எஸ். பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது
குறித்த கராத்தே சுற்று போட்டியில் பல்வேறு திணைக்கள கராத்தே அணிகள் பங்குபற்றியிருந்த நிலையில்
கராத்தே போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் T. பிரசாத் கலந்து கொண்டு 01 தங்க பதக்கத்தையும் 01 வெள்ளி பதக்கத்தையும் பெற்று சிறைச்சாலை திணைக்களத்திற்கும் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கும் பெருமை தேடிதந்துள்ளார்.
கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்களை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு.துஷார உபுல்தெனிய சிறைச்சாலை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
சிறைச்சாலை கராத்தே அணியில் இடம்பிடித்து கராத்தேபோட்டியில் பங்கு பற்றிய யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு இன்றைய தினம் யாழ்ப்பாண சிறைச் சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது
வெற்றியீட்டிய வீரருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் சிறைச்சாலை அத்தியாச்சகர் யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதம பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
Post a Comment