தர்மலிங்கத்தின் திருவுருவசிலை யாழில் திறப்பு..!! - Yarl Voice தர்மலிங்கத்தின் திருவுருவசிலை யாழில் திறப்பு..!! - Yarl Voice

தர்மலிங்கத்தின் திருவுருவசிலை யாழில் திறப்பு..!!யாழ்ப்பாணம் - உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று இடம்பெற்றது.

இன்று காலை 9.30 மணிக்கு வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் போராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி அறு திருமுருகன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.கஜதீபன், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post