இடர் சுமந்த மேனியர் எனும் நூல் யாழ் பல்கலையில் வெளியீடு..!! - Yarl Voice இடர் சுமந்த மேனியர் எனும் நூல் யாழ் பல்கலையில் வெளியீடு..!! - Yarl Voice

இடர் சுமந்த மேனியர் எனும் நூல் யாழ் பல்கலையில் வெளியீடு..!!யாழ் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் தமிழியற் கழகத்தின் இரண்டாம் வருட மாணவி முல்லை முகுந்தினியின் இடர் சுமந்த மேனியர் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ் பல்கலைக்கழக தமிழியற்துறை தலைவி ஜெயா தலைமையில் காலை  இடம்பெற்றது.

யுத்த கால நினைவுகளையும் தனது ஒன்பது வயதில் கண்டுகளித்த வாழ்க்கையின் அனுபவங்களையும் உணர்வுபூர்வமாக  எடுத்தியம்பும் முகமாக முல்லை முகுந்தினியின் நூல் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில் நூல் வெளியீட்டு நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா மற்றும் கலைப்பீட பீடாதிபதியும் வாழ்த்துரையை வழங்கினர்.

தொடர்சியாக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதனால் வெளியீட்டுரை இடம்பெற்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரால் இடர்சுமந்த மேனியாய் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

 நூலின் முதற் பிரதியை துணுக்காய் பாண்டியன் குளம் தொழில்நுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு மைய தலைவர் திரு கார்த்திகேசு யோகநாதன் பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்விலா யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, யாழ் பல்கலைக் கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சுதாகர், யாழ் பல்கலைக் கழக தமிழ்த்துறை தலைவர் ம.இரகுநாதன்,
தமிழியற் கழக தலைவி ஜெனா, நூலாசிரியர் முல்லை முகுந்தினி, பேராசிரியர்கள்,
விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post