பிளவடைந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றாகச் சந்தித்த ஜெய்சங்கர்! - Yarl Voice பிளவடைந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றாகச் சந்தித்த ஜெய்சங்கர்! - Yarl Voice

பிளவடைந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றாகச் சந்தித்த ஜெய்சங்கர்!இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும்,  தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது.

நேற்று நண்பகல் நடைபெற்ற இந்தப் பேச்சில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல், அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் காணி விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி., தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. தேர்தல் பணி காரணமாக இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post