வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!! - Yarl Voice வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!! - Yarl Voice

வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!



வடக்கு ரயில் பாதையில் அநுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் பாதை சீரமைப்பு பணிகள் இன்று (8) வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 91 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (33 billion ரூபா) செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படும் IRCON நிறுவனம் திருத்த பணிகளை மேற்கொள்கிறது.  

இந்த ரயில் பாதை சீரமைப்பு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மதவாச்சி ரயில் நிலையத்தில்  இடம்பெற்றது. இதில்  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,  போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மற்றும் ரயில் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இன்றுமுதல் 5 மாத காலப்பகுதிக்குள் அனுராதபுரத்திற்கும், வவுனியாவுக்குமிடையிலான ரயில் தண்டவாளங்களை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post