பொன் அணிகளின் போர் நாளை மறுதினம் ஆரம்பம்!! - Yarl Voice பொன் அணிகளின் போர் நாளை மறுதினம் ஆரம்பம்!! - Yarl Voice

பொன் அணிகளின் போர் நாளை மறுதினம் ஆரம்பம்!!‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி மொபிற்றலின் அனுசரனையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகின்றது. 

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் பெப்ரவரி 24, பெப்ரவரி 25 ஆகிய இரு தினங்கள் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. 

1917ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பெருந்துடுப்பாட்டப் போட்டி 106ஆவது வருடமாக நடைபெறவுள்ளது. 

அத்துடன், இரு அணிகளும் மோதும் ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்துக்கான 30ஆவது ஒருநாள் போட்டி மார்ச் 4ஆம் திகதியும் மூன்றாவது இருபது – 20 போட்டி மார்ச் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. 

போட்டிகள் தொடர்பாக பங்கேற்கும் அணிகளின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது. 

இதன்போது இரண்டு அணிகளின் தலைவர்களாலும் வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

குறித்த நிகழ்வில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அதிபர் ருஷிரா குலசிங்கம், சென். பற்றிக்ஸ் கல்லூரி அதிபர் ஏ.பி. திருமகன், அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post