யாழ் பல்கலையில் ஓவியக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு!! - Yarl Voice யாழ் பல்கலையில் ஓவியக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு!! - Yarl Voice

யாழ் பல்கலையில் ஓவியக் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு!!




யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்
ம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து  இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது  பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று (24) காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெறவுள்ளது. 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டத்துடன் இணைந்து  “இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது  பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்” என்னும் தலைப்பில் ஓவியப்போட்டி ஒன்றைக்   கடந்த வருடம் நடாத்தியிருந்தது. 

இதற்காக இலங்கை முழுவதும் உள்ள ஓவியர்களிடமிருந்து  பொருளாதார நெருக்கடியின் போதான வன்முறைகள், உணவுப் பற்றாக்குறை, வறுமை, போக்குவரத்துச் சிரமங்கள், அதிகரித்த வேலையின்மை, கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவம், விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்டம், வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை மற்றும் உள்ளூர் நிர்வாகம்  போன்ற உப தலைப்புக்களில்  வரையப்பட்ட சமார் 1925 ஒவியங்கள்  சேகரிக்கப்பட்டிருந்தன. 

ஓவியப் போட்டயில்  வெற்றிபெற்ற ஓவியங்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் 27ம் திகதி மாலை 2 மணிக்கு வழங்கப்படவுள்ளன. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post