புற்று நோயாளர்களுக்கான மருந்துகள் கிடைக்க ஆறு மாதங்களுக்கு தாமதமாகும்‼️ - Yarl Voice புற்று நோயாளர்களுக்கான மருந்துகள் கிடைக்க ஆறு மாதங்களுக்கு தாமதமாகும்‼️ - Yarl Voice

புற்று நோயாளர்களுக்கான மருந்துகள் கிடைக்க ஆறு மாதங்களுக்கு தாமதமாகும்‼️



சிகிச்சைக்காக புற்று நோயாளர்களுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிய வந்துள்ளது.

மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே இதற்குக் காரணம். எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய புற்றுநோய் பிரச்சாரத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், மார்பக புற்றுநோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று வைத்தியர் இஷானி குறிப்பிட்டார்.

முக்கிய மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மையமானது நாரஹேன்பிட்டியில் உள்ளதாகவும் இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சிகிச்சை நிலையங்கள் உள்ளதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post