வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்..!! - Yarl Voice வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்..!! - Yarl Voice

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சி பேரணி யாழில் ஆரம்பம்..!!இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி இன்று ஆரம்பமானது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக சென்ற நிலையில் பொலிஸார் பேரணியை நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து பேரணியை தடுக்க முற்பட்ட போது போராட்டக்காரர்கள் பொலிஸாரின் தடைகளை உடைத்து இராமநாதன் வீதி ஊடாக பயணித்தனர்.

பின்னர் இராமநாதன் வீதியின் ஊடாக சென்ற பேரணியை கலட்டி சந்தியில் மீண்டும் பொலிஸார் இடைமறித்த போது தடைகளை மீறி போராட்டக்காரர்கள் தொடர்ந்து பயணித்து காங்கேசந்துறை வீதியை சென்றடைந்தனர்.

தொடர்ந்து காங்கேசந்துறை வீதியால் பயணித்த பேரணி உலக தமிழாராய்சி மாநாட்டு படுகைலை நினைவுத் தூபிக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வைத்தியசாலை வீதிக்கு சென்றது.

பின்னர் வைத்தியசாலை வீதியில் இருந்து ஆரம்பமான பேரணி ஏ9 வீதிக்கு சென்று செம்மணி சந்தியை அடைந்தது.

செம்மணி சந்தியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மட்டக்களப்பு நோக்கிய பேரணி தொடர்ந்து பயணித்தது.

பேரணி காரணமாக யாழ்ப்பாண நகர் பகுதியில் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post