பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா சிங்களவரில்லை. அவரின் பெயர் கூட போர்த்துக்கல் வில் இருந்து வந்த பெயர் தான். ஆகவே அவரை போர்த்துக்கல்லுக்கே போகச் சொல்லுகிறேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி நாட்டில் சமஸ்டிக்கு இடமில்லை என்றும் அத்தகைய ஒற்றையாட்சி நாடான இலங்கையில் வாழ முடியாவிட்டால் விக்கினேஸ்வரன் இலண்டனுக்கு ஓட வேண்டும் என்றவாறு ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலைக்கதிர் பத்திரிகையில் பிரதான தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்த நிலையில் இன்றையதினம் ஊடகவியலாளர்கள் விக்கினேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இவிவிடயம் குறித்து விக்கினேஸ்வரன் எம்பி மேலும் தெரிவித்துள்ளதாவது..
சரத் பொன்சேகா என்னை இலண்டனுக்கு போகச் சொன்னால் நான் அவரை போர்த்துக்கல்லுக்கு போகச் சொல்ல வேணும். ஏனெனில் அவரின் பெயரே போர்த்துக்கல்லில் இருந்து வந்த பெயர் தான்.
பொன்சேகா என்டது சிங்கள பெயரும் இல்லை தமிழ் பெயரும் இல்லை. ஆகவே அவரை போர்த்துக்கல்லுக்கு போகச் சொல்லுங்கள் என சரத் பொன்சேகாவிற்கு பதிலளித்துள்ளார்.
Post a Comment