பெண்களின் உரிமையை வலியுறுத்தி யாழில் போராட்டம் - Yarl Voice பெண்களின் உரிமையை வலியுறுத்தி யாழில் போராட்டம் - Yarl Voice

பெண்களின் உரிமையை வலியுறுத்தி யாழில் போராட்டம்பெண்களின்  உரிமைகள் பாதுகாக்கப்பட  தொடர்ந்தும் அனைவரும் குரல்கொடுக்க வேண்டும்  என  கரித்தாஸ் கியூடேக்  இயக்குனர் அருட்பணி யூஜின் பிரான்சிஸ் அடிகளார்  தெரிவித்தார்.

கரித்தாஸ் கியூடேக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தினம்  மகளிர் உரிமையை மதிப்போம் என்ற தொனிப்பொருளிலான பேரணியும் மகளிர் சுயதொழில் முயற்சியாளர்களின் விழிப்புணர்வு கண்காட்சியும் விற்பனையும்  இன்று வியாரக்கிழமை  இடம்பெற்றது

 யாழ்ப்பாணத்திலுள்ள கரித்தாஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பமான பேரணியானது யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள மடுத்தினார் குருமட முன்றலில்  நிறைவடைந்தது.

 இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தொரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

 மகளிர் தினம் என்றால் மட்டும் மகளிருக்காக குரல் கொடுப்பதாக இருக்க கூடாது பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும் பொண்கள் அடிமைதனத்திலிருந்து   விடுதலை பெறவேண்டும் ,அவர்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்,மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் இன்று மட்டுமல்ல  ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல்  பொண்கள் உரிமைக்காக குரல்கொடுத்து வருகிறது.

 இன்னைய சூழலை அவதானித்தால்  பொருளாதார நெருக்கடிகளால் நாடே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுயதொழில் முயற்சியாளர்களாக உள்ள பெண்கள் பல  துன்பங்களை தாங்கி கொண்டும்  தமது   குடும்பங்களை வழிப்படுத்தி வருகிறார்கள் சமூகத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 எனவே  பெண்களின் முன்னேற்த்திற்கு துணை கொடுப்பவர்களாக நாங்கள் அனைவரும் மாறவேண்டும். பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து வடப்படும் அனைத்து துன்பங்களை நீக்க அனைவரும் பாடுபடவேண்டும். பெண்களை மதிக்க  உரிமைகள் பாதுகாக்க அனைவருமே குரல் கொடுக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post