யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக சிறிலை நியமிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்!! - Yarl Voice யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக சிறிலை நியமிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்!! - Yarl Voice

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக சிறிலை நியமிக்க தமிழரசுக் கட்சி தீர்மானம்!!



இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நிறுத்தப்படுவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்து.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

2023 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் கடந்த மாதம் 28 ஆம் திகதி இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது தோற்கடிக்கப்பட்டது.

இதனால் இம்மானுவேல் ஆனல்ட் தனது முதல்வர் பதவியை இழந்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளதால், இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலை நிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 9 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post