யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை ஆரம்பம்! - Yarl Voice யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை ஆரம்பம்! - Yarl Voice

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நாளை ஆரம்பம்!



பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளுடன் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது இம்முறை 14 வது ஆண்டாக மிகச்சிறப்பான முறையில்
ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் தலைவர் கே. விக்னேஷ் தெரிவித்தார்.

வர்த்தக சந்தை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd (LECS) நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்தகத்
தொழிற்துறை மன்றத்துடன் (CCIY) இணைந்து யாழ் மாநகர சபை, சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும்
வர்த்தக அமைச்சு, வடமாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் இடம்பெறுகின்றது.
கைத்தொழில்துறை வளர்ச்சியில் சந்தைவாய்ப்பு தொடர்பில் வடக்கில் இருந்த பாரிய ஒரு இடைவெளியானது யாழ்ப்பாணம்
சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலமாக குறைக்கப்பட்டுள்ளது ஏன் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

எமது உள்ளூர் உற்பத்திகள் இன்று தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளையும் ஆக்கிரமித்து உள்ளது என்றால்
இவ்வாய்ப்புகளை உருவாக்கலுக்கான அடித்தளம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டது
மறுக்கமுடியாதது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும்,
வடக்கிலுள்ள சமூகங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்வேறு வகையான உற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிந்து
கொள்வதற்கும், தெற்கு மற்றும் சர்வதேச தொழில் முயற்சியாளர்கள் வடக்கிலுள்ள சக தொழில் முயற்சியாளர்களைச்
சந்தித்து வியாபார பொருளாதார தொழில்நுட்பரீ தியில் தொடர்புகளை வளர்க்கும் ஒரு களமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச
வர்த்தகக் கண்காட்சி அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் 45,000 தொடக்கம் 50,000 வரையான பார்வையாளர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுவதுடன்,
பல்வேறுபட்ட வழங்குனர்களால் 250 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம், விருந்தோம்பல், கல்வி, உணவு
, நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக விவகாரங்கள் இந்நிகழ்வில் அடங்கியுள்ளதுடன்,
இது இடம்பெறும் காலப்பகுதியில் வடக்கிலுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

போக்குவரத்து மற்றும் பண்ட
இடம்பெயர்வு மேலாண்மை போன்ற ஏனைய சேவைகளும் இக்காலப்பகுதியில் துரித வியாபார மீட்டும் வாய்பப்புகளை
பெறுகின்றன.
கடந்தகாலங்களில் இந்த நிகழ்வு அடையப்பெற்ற எதிர்பாராத வளர்ச்சி தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கருத்து
வெளியீட்டுள்ளதுடன், வடக்கில் கிடைக்கப்பெறுகின்ற வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்பில் தாம் அடைந்த சாதகமான
விளைவுகள் பற்றி வர்த்தகர்கள் நேரடி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொனிப்பொருளான பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின்
நுழைவாயில் என்பதன் அர்த்தத்தையும் அதனால் நாம் அடைந்த மற்றும் அடையப்போகும் சாதகமான விளைவுகளையும்
முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு இதை ஒரு களியாட்ட நிகழ்வாக பார்க்காமல் சகல தரப்பினரும் செயல்பட
வேண்டிய ஒரு கடமைப்பாடு உள்ளது - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post