பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலையில் போராட்டம்! - Yarl Voice பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலையில் போராட்டம்! - Yarl Voice

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலையில் போராட்டம்!யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post