இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றையதினம் நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்திய மீனவர் விவகாரம் தொடர்பிலான கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது...
எமது கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்துமீறல்கள் இப்ப நடக்காது என்று இப்ப என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்ற அரசாங்கத்தினுடைய கொள்கையும் இதில் விசேடமாக கடல் தொழில் அமைச்சருடைய எண்ணங்கள் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
அந்த வகையில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவது எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது
அதனை ராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்டரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்க தயாராக இருக்கின்றோம். அதற்கான முனைப்புகளிலேயே தற்போதும் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தியாவினுடைய தடைக்காலம் நேற்று முன்தினம் முதல் முடிவடைந்திருக்கிறது. எனினும் தடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாத்துக்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இருந்தும் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்.
எமது ஜனாதிபதி இந்தியா சென்றபோது மீனவர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடன் கதைத்து இருக்கிறார். அதேபோல வெளிவிவகார அமைச்சருடனும் பேசியிருக்கிறார்.
வடமாகாண மீனவர்களுடைய இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.
அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும் என்றார்.
---------------------
-எஸ்நிதர்ஷன்-
இவ்வாறு ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் என்னைப் பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயன்ற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும்.
உண்மையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரச்சனைகளை தீராப் பிரச்சனைகளாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கிறேன்.
இவர்கள் எல்லோரையும் உருளைக் கிழங்கு மூட்டையில் கட்டி வைத்திருந்தது போன்று ஒன்றாக கட்டி வைத்திருந்தாலும் இன்றைக்கு பிரபாகரன் இல்லாத சூழலில் கட்டு கழன்டு உள்ளதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில் இவர்களுக்குள் ஐக்கியம் ஒற்றுமை எங்கே இருக்கிறது. பர வருடமாக இப்படி கட்டி வைத்து என்ன கிடைத்தது. அழிவை கட்டுப்படுத்த முடிந்த்தா அல்லலது முன்னேற்றம் ஏதும் வந்த்தா? ஒன்றும் இல்லாத நிலையில் இப்ப தேர்தல் வருகிறபடியால் மீண்டும் அந்த என்றும் பற்றி பேசுகின்றர்.
எம்மைப் பொறுத்தவரையில் இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதை கூறினோமே அதனையே இப்போதும் கூறுகிறோம். ஆக சொல்வதை செய்வதும் செய்வதை சொல்வதும் தான் நான்.
எனவே எங்களை நம்பி மக்கள் எம்மோடு பயணிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.
Post a Comment