யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசேட பொலிஸ் பிரினனரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது...
யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் எழுதுமட்டுவால் பொலிஸ் சோதனைச் சாவடியினூடாக இரண்டு டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி வரப்பட்டுள்ளது.
இதன் போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இரண்டு டிப்பர் வாகனங்களிலும் சோதனை செய்ததுடன் அவர்களிடமிருந்து 45 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாம்ம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இந்த சோதனைச் சாவடியில் பொலிஸார் இலஞ்சம் பொறுவதாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலையே யாழ்ப்பாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசேட குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலையே இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
Post a Comment