ஐனாதிபதிக்கு ஆதரவானவர்களுக்கே அதிக நிதி ஒதுக்கீடு - சுமந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice ஐனாதிபதிக்கு ஆதரவானவர்களுக்கே அதிக நிதி ஒதுக்கீடு - சுமந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice

ஐனாதிபதிக்கு ஆதரவானவர்களுக்கே அதிக நிதி ஒதுக்கீடு - சுமந்திரன் குற்றச்சாட்டு



ஐனாதிபதிக்கு ஆதரவை வழங்கி வருகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே தற்போது அதிகளவான நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெளிவாக புலப்படுகிறது. 

இவ்வாறு தமீழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில் வர்த்தக சங்கத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது

எங்களுக்கு சொல்லப்பட்ட பிரகாரம் பகிரப்பட்ட நிதியொதுக்கீடு சம்பந்தமாக அனைவருக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால்  ஆரம்பத்திலே அந்த நிதி சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கபட்டிருந்தனர். 

இது சம்பந்தமாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஏற்கனவே கதைத்திருந்தோம்.

எங்களுக்கு வழமையான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டினை போலவே திட்டமுன்மொழிவுகளை வழங்குமாறு சொல்லப்பட்டது. அதன்படி யாழ் அரசாங்க அதிபர் வழமை போல் எமக்கு கடிதங்களை எழுதினார். அந்த கடிதங்களுக்கு பதில் அளித்து நாம் திட்டங்களை முன்மொழிந்து இருந்தோம். 

ஆனால் எங்களுடைய முன்மொழிவுகள் இழுத்தடிக்கபட்டது . இவ்வாறான நிலைமையில் தற்பொழுது எங்களது முன்மொழிவுகளுக்கு அனுமதி வளங்கபட்டுள்ளதாக அறிகின்றோம்.

 ஆனால் இதற்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதியொதுக்கீடு இடம்பெற்றது. இது சம்பந்தமாக பாராளுமன்றிலும் நிரல் ஒன்று சமர்பிக்கப்பட்டு கேள்வி எழுப்பப்பட்டது .

ஆகையினால்  ஜனாதிபதி தனக்கு ஆதரவளிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கருதுபவர்களுக்கு அதிகமான நிதயொதுக்கீட்டினை வழங்கி உள்ளார் என்பது தெளிவாக தெரிந்தது.

ஆனால் இந்த விடயம் பொதுவெளியில்  குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்ட பிறகு மற்றவர்களுக்கும் இந்த நிதி தற்போது பகிர பட்டுள்ளதாக அறிகின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post