தமிழ் சிங்கள முஸ்லீம் வேட்பாளர்களை கொழும்பில் களமிறக்கும் டக்ளஸ் - Yarl Voice தமிழ் சிங்கள முஸ்லீம் வேட்பாளர்களை கொழும்பில் களமிறக்கும் டக்ளஸ் - Yarl Voice

தமிழ் சிங்கள முஸ்லீம் வேட்பாளர்களை கொழும்பில் களமிறக்கும் டக்ளஸ்



வடக்கு கிழக்கு முழுவதும் மட்டுமல்லாது கொழும்பிலும் இம்முறை போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ள ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா தமிழ் சிங்கள முஸ்லீம் வேட்பாளர்கள் என பலதரப்பினரும் கொழும்பில் நிறுத்தபடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..

''வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் மற்றும் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு மக்கள் அமோக ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா என கேட்டதற்கு – 

கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.  அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகின்றோம்.

இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் தமிழ் சிங்கள முஸ்லிம் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post