சிஎஸ்கே அணியில் நடராஜன் விளையாட வாய்ப்பு.. வலை வரித்த தோனி.. - Yarl Voice சிஎஸ்கே அணியில் நடராஜன் விளையாட வாய்ப்பு.. வலை வரித்த தோனி.. - Yarl Voice

சிஎஸ்கே அணியில் நடராஜன் விளையாட வாய்ப்பு.. வலை வரித்த தோனி..



ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 33 வயதான நடராஜன் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2020 ஐபிஎல் சீசனில் இருந்து தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடராஜன் சன்ரைசர்ஸ் அணியில் உள்ளார். கடந்த சீசனில் கூட நடராஜன் 14 போட்டியில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் இருந்தபோது நடராஜனை வளர்த்து அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

நடராஜன் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதற்கு வார்னர் ஒரு காரணமாக இருக்கிறார். இந்த சூழலில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு பிறகு ஒவ்வொரு அணியும் உடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை தான் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஏற்கனவே அப்துல் சமத், ஏய்டன் மார்க்கரம், ராகுல் திருப்பாதி, வாஷிங்டன் சுந்தர், பேட் கம்மின்ஸ், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் அணி ஆர்வம் காட்டும்.

இந்த சூழலில் நடராஜன் விடுவிக்கப்பட்டு அவர் ஏலத்தில் வந்தால் சன்ரைசர்ஸ் அணி மீண்டும் அவரை ஏலம் மூலம் எடுப்பது கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடராஜனை ஏலம் மூலம் எடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இடது கை வேகப் பந்துவீச்சாளர் ஒவ்வொரு அணிக்கும் மிகவும் முக்கியம்.

அந்த வகையில் நடராஜன் தமிழக வீரர் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தின் களச் சூழல் அவருக்கு நன்றாகவே தெரியும்.
அது மட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக கிரிக்கெட் வீரரே இல்லை என்ற ஒரு குறை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனால் தன்னுடைய கடைசி சீசனில் தோனி நடராஜன், அஸ்வின் உள்ளிட்ட தமிழக கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்.

சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நடராஜன் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதால் அவரை போட்டி போட்டு சிஎஸ்கே அணி எடுக்கும். இதேபோல் நடராஜன் முன்னாள் குருவான வார்னர் டெல்லி அணியில் தற்போது இருக்கிறார். நடராஜனை டெல்லி அணிக்கு எடுக்குமாறு அவர் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஏலத்தில் சிஎஸ்கேவும் டெல்லி அணியும் நடராஜனையும் வாங்க கடுமையாக போட்டி போடும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post