சிஎஸ்கேக்கு கடமைப்பட்டுள்ளேன்.. சென்னையில் வேறு அணிக்காக விளையாடிய போது கஷ்டமாக இருந்தது- அஸ்வின் - Yarl Voice சிஎஸ்கேக்கு கடமைப்பட்டுள்ளேன்.. சென்னையில் வேறு அணிக்காக விளையாடிய போது கஷ்டமாக இருந்தது- அஸ்வின் - Yarl Voice

சிஎஸ்கேக்கு கடமைப்பட்டுள்ளேன்.. சென்னையில் வேறு அணிக்காக விளையாடிய போது கஷ்டமாக இருந்தது- அஸ்வின்



ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது.

இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு பத்து ஆண்டுகள் கழித்து அஸ்வின் திரும்புகிறார். அஸ்வினின் வருகையால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே அணியில் ஜடேஜா உள்ள நிலையில் தற்போது அஸ்வின் மற்றும் ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமத் ஆகியோர் அணிக்கு திரும்பிருக்கிறார்கள்.

இதன் மூலம் சி எஸ் கே அணியை சொந்த மண்ணில் சுழற்பந்துவீச்சு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து சிஎஸ்கே அணியின் youtube சேனலுக்கு பேட்டியளித்துள்ள அஸ்வின், வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வார்கள்.

நான் 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணிக்காக தான் விளையாடினேன். தற்போது பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்பி இருக்கின்றேன். சிஎஸ்கே அணிக்கு நான் நிறைய கடமைப்பட்டுள்ளேன். நான் சிஎஸ்கேவில் கற்ற விஷயங்கள் தான் என்னை சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைக்க உதவியது.

கடந்த 10 ஆண்டுகளாக நான் வேறு அணிக்காக சென்னையில் வந்து விளையாடிய போது என் மனது அவ்வளவு கஷ்டமாக இருக்கும். நான் பந்து வீசும் போதும் நான் பேட்டிங் செய்யும்போதும் சிஎஸ்கே ரசிகர்கள் கத்த மாட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தில் நான் Anbuden என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கின்றேன்.

தற்போது அந்த ரசிகர்களை மீண்டும் சந்திக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். நான் திரும்ப சிஎஸ்கே அணிக்கு வருகிறேன்.சென்னையில் வந்து விளையாடுகிறேன் என்பதை விட என் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயம் நடந்தது. 2011 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி என்னை வாங்க ஏலத்தில் கடுமையாக போட்டி போட்டார்கள்.

தற்போது அதேபோல் என்னை மீண்டும் ஏலத்தில் போட்டி போட்டு சிஎஸ்கே எடுத்து இருக்கிறார்கள். தோனி உடனும் கேப்டன் ருதுராஜ் தலைமையிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் நாளை நினைத்து நான் எதிர்கொண்டு காத்திருக்கின்றேன். மிக்க மகிழ்ச்சி என்று அஸ்வின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post