தேசிய மக்கள் சக்தி ஒரு மாயை! மாற்றத்துக்காக நாங்களே உள்ளோம்! மணிவண்ணண் - Yarl Voice தேசிய மக்கள் சக்தி ஒரு மாயை! மாற்றத்துக்காக நாங்களே உள்ளோம்! மணிவண்ணண் - Yarl Voice

தேசிய மக்கள் சக்தி ஒரு மாயை! மாற்றத்துக்காக நாங்களே உள்ளோம்! மணிவண்ணண்



தமிழ் மக்களுக்காக சேவையாற்றிய
இளையோருக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இம்முறை மக்கள் மத்தியில் மான் சின்னத்திற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.

இந்த தேர்தலில் புதியவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர்.தகுதியான புதியவர்களை பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும். முன்னர் பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களை ஏமாற்றாத ஒரே அணியாக நாம் இருக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என் செய்தார்கள் என்றும் யாருக்கும் தெரியாது. போட்டியிடுபவர்களுக்கும் தெரியுமோ தெரியாது. 

தமிழ் மக்களுக்காக சேவையாற்றிய
இளையோருக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி ஒரு ஏமாற்று மாயை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இம்முறை மக்கள் மத்தியில் மான் சின்னத்திற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

வடிவேல் கோவை சரளா போன்ற பாணியில் செயற்படுபவர்களை மக்கள் பார்த்து சிரிப்பார். ஆனால் வாக்களிக்க போவதில்லை. அதற்கு சில தகுதிகள் வேண்டும் - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post