இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனலைத்தீவு மீனவர்கள் இருவரையும் விடுவிக்க கோரி யாழ்ல ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் முன் போராட்டம்
கடந்த10/06/2024 திகதியன்று யாழ் அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற வேளை கடல் சீற்றம் காரணமாக தமிழகம் ஆர்காட்டுதுறையில் கரையொதுங்கி தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரு மீனவர்களையும் விடுவிக்க கோரி ஊற்காவற்றுறை பிரதேச செயலகம் முன்பாக அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனலைதீவு மீனவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் விஐயகுமார், திருச்செல்வம் மைக்கல் பெர்ணாண்டோ ஆகிய இரு மீனவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இவர்களை விடுவிக்க கோரிய இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் இறுதியில் போராட்டக்காரர்களால் ஊர்காவல்துறை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீசனிடம் மகஜரொன்றும் கையளிக்கப்படடது.
Post a Comment