வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நூற்றிற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் லூட்சன் பண்டார வெளிநாட்டு ஆசைக்காக பணத்தைக் கொடுத்து ஏமாறாமல் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைக் காலமாக யாழின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பான முறைப்பாடுகள் பலவும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
அதிலும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடமும் பல கோடிக் கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு சிலர் தப்பியோடி இருக்கின்றனர்.
அவ்வாறு தப்பியோடியவர்கள் மீளவும் இங்கு வருகிற போது கைது செய்கிற சம்பவங்களும் நடக்கிறது. ஆனாலும் வெளுநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பெருமளவிலான ரூபாய்கள் மோசடி செய்யப்படுகிறது.
வெளிநாட்டிற்கு அனுப்புவதாக பண மோசடி செய்த சம்பவங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.
குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடு செல்லும் மோகத்தினால் பதிவுசெய்யபடாத வேலைவாய்பு பணியகத்தில் பதியபடாத முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்
அதிலும் எத்தனையோ பேர் ஆதாரங்கள் இல்லாமல் முறைப்பாடு கூட போட முடியாமல் உள்ளார்கள். எனவே வெளிநாட்டு மோகத்தால் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் விஷேட குற்ற விசாரனை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் கேட்டுள்ளனர்.
Post a Comment