இவ்வாறு ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது..
நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தது தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜேவிபி தான்.
ஆனால் தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள அந்தக் கட்சியும் தாம் சொல்லி வந்த கொள்கைக்கு நேர்மாறாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருவதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
அதிலும் தமிழ் மக்கள் விடயத்தை எடுத்துக் கொண்டால் அதைச் செய்வோம் இதைச் சேய்வோம் எனக் கூறியிருந்தாலும் அவை எதனையும் செய்யாமல் தமிழ் மக்கள் விரும்காத அல்லது ஏற்றுக் கொள்ளாத கருத்துக்களை வெளியிடுவதுடன் முற்றுமுழுதாக மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அனுர தரப்பினர் இதுவரையில் எடுத்து நடவடிக்கை தான் என்ன? தெற்கு மக்களின் வாக்குகளைப் பெற வேண்டுமென்பதற்காக பாசாங்கு அரசியலை செய்து வருகின்றனர்.
கல்வியிலும் சுகாதாரத்திலும் அபிவிருத்தியிலும் ஊழல் ஊழல் என்று சொல்லிக் கொண்டு வந்த அனுர தரப்பினர் ஊழலை ஓழிக்க முன்னெடுத்த நடவடிக்கைளகள் என்ன என்ற நியாயமான கேள்விகள் எழும்பியிருக்கின்றன.
அதுமட்டுமல்லாது சிவில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு, ஊழல் மோசடி, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான தீர்வு தொடர்கில் முன்னர் வெளிப்படுத்தி இருந்தாலும் இன்றைக்கு அவர்களது கருத்துக்களும் செயற்பாடுகளும் அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது.
தற்போது அக் கட்சியினர் இங்கு செய்யும் அரசியல் சித்து விளையாட்டுக்கள் அனைத்தும் நீதி நியாயமான நேர்மையற்ற நிர்வாகத்தை நடாத்த உகந்த செயல் அல்ல.
தமிழ் மக்களின் இனப் பிரச்சனையை தீர்ப்பதாக முன்னர் சொல்லியிருந்த நிலையில் அந்த இனப் பிரச்சனை தீர்க்க கூடிய ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என்று நாங்கள் அறிவித்திருந்தோம்.
ஆனாலும் அனுர தரப்பின் ஆட்சியாளர்களின் செற்பாடுககளைப் பர்க்கின்ற அதற்கு முற்றிலும் எதிர்மறையாக உள்ளது . உண்மையில் அவர்கள் சொன்னபடி நடக்கிறார்களா என்றால் இல்லை.
நாங்கள் ஒருமித்து ஒரே குரலில் போட்டியிடுகிறோம். ஆகவே எம்மை பாதிப்படைய செய்யாமல் மக்கள் தமது முழுமையான அதரவை எமக்கு வழங்க வேண்டும். அதுவே மக்கள் விரும்புகிற மாற்றமாக அமையும் என்றார்.
Post a Comment