திருகோணமலையில் பயங்கரம்!! வைத்தியரின் மனைவி படுகொலை - Yarl Voice திருகோணமலையில் பயங்கரம்!! வைத்தியரின் மனைவி படுகொலை - Yarl Voice

திருகோணமலையில் பயங்கரம்!! வைத்தியரின் மனைவி படுகொலை



திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) இன்று காலை வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ்த்தில் மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இன்று காலை கொலையுண்டவர் கொழும்பில் இருந்து வீடு திரும்பி அறைக்குள் சென்றபோதே கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சடலம் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும்கொலை தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post