இரு தேசங்கள் ஒரு நாடு" எனும் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கில் சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிட்டார்.
இதன்போது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்னர்.
Post a Comment