இவ்வாறு ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் புளொட் அமைப்பின் தலைவரும் வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சனைகளில் மிக மிக எதிரான நிலைப்பாட்டிலேயே ஜேவிபி செயற்பட்டு வருகிறது. அவ்வாறானவர்களிடம் இருந்து நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது.
கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே எங்களது அடிப்படை அரசியல் பிரச்சனையில் அக்கறை இல்லாதவர்களாகவே இந்த ஆட்சியாளர்களும் தென்படுகின்றனர். அதிலும் தமிழர் விவகாரங்களில் அவர்களிடம் இருந்து நாங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனாலும் அவர்கள் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறதனால் அவர்களுடன் தான் நாங்கள் பேச வேண்டும். அதனால் அவர்கள் ஏதோ செய்து விடுவார்கள் என்று நாங்கள் கருதவில்லலை.
அப்படியாக நிலைமைகள் இருந்தாலும் தமிழ் மக்கள் பலமான அமைப்பாக உருவாக வேண்டும். ஆனால் இன்று எமது மக்கள் குழப்ப நிலையில் தான் இருக்கிறார்கள். ஏனெனில் இவ்வளவு கட்சிகள் சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றார்கள் என்ன நடக்கப் போகிறது என்று கேட்டால் எதுவுமே நடக்காது.
இன்றைய சூழ் நிலையில் இந்த அரசாங்கம் ஏதோ பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் ஒரு சில தமிழர்களும் நிற்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிலே தமிழர்களும் வேட்பாளர்களாக நிற்கின்றார்கள்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சனையில் இந்த அரசாங்கம் நியாயமான தீர்வை முன்வைக்கும் என்று இவர்கள் எடுத்து கூறவும் மாட்டார்கள். அரசாங்கமும் அதனைச் செய்ய முன்வராது.
அதாவது ஜேவிபி தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் தமிழ் மக்களிற்கு எதிராகவே செயற்பட்டு வந்தவர்கள். இக் கட்சியின் முன்னைய தலைவர்களை எடுத்துப் பார்த்தால் மிக மிக கடுமையான சிங்கள இனவாத தீவிர நடவடிக்கைகளையே எடுத்து வந்திருக்கிறார்கள்.
அவர்கள் எப்போதும் இனவாத போக்குடனேயே செயற்பட்டும் வந்திருக்கிறார்கள். அதன் வழியிலே தான் இவர்களும் வருகிறார்கள். ஆனால் இன்றைய ஐனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோர் இனவாத ரீதியாக பகிரங்கமாக இப்போது செயற்படாவிட்டாலும் அந்த கட்சியின் முடிவுகள் இனவாத ரீதியாக எடுக்கப்பட்டு இப்போது பகிரங்கமாகவே சொல்லப்பட்டு வருகிறதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக மாகாண சபையை அமுல்படுத்த தயாராக இல்லை. வடக்கு கிழக்கை உடைத்ததும் இவர்கள் தான். இப்போது கூட ஐ.நா தீர்மானத்தை முழுமையாக எதிர்க்கிறார்கள். எங்களுடைய மக்களின் கோரிக்கையான சர்வதேச விசாரணையை எதிர்க்கிறார்கள்.
இப்படியாக தமிழ் மக்கள் விவகாரத்தில் கடந்த கால அரசுகள் எதைச் செய்ததோ அதனையே இவர்களும் இப்போது செய்கிறார்கள். அதிலும் கடந்த கால அரசுகளை விடவும. மோசமான சிந்தனையை வெளிப்படுத்தி வருவதையும் பார்க்க வேண்டும்
தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு முன்னைய சில அரசுகள் தீர்வு வழங்க வேண்டும் என சில முயற்சிகளை எடுத்தது. ஆனால் முழுமையான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்பே மிக தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வை தாம் தரமாட்டார்கள் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இருந்தாலும் அவர்கள் அரசாங்கமொன்றை அமைக்க போவது நடக்கப் போகிற ஒரு விடயம். அப்படியாக வரக்கூடிய அரசில் தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாடுகளை முன்னகர்த்திச் செல்வதற்கோ அல்லது அந்த அரசுடன் பலமாக கதைப்பதற்கோ பலமான தமிழ்க் கட்சியொன்று இங்கிருந்து செல்ல வேண்டும்.
அவ்வாறு பலமாக இருக்கிற போது தான் தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேசப்படுகிறது. இப்படியாக தமிழர் விவகாரம் குறித்து பேசுவதற்கு வடகிழக்கில் ஒற்றுமையாக ஒரே அணியாக உறுதியான கெள்கையில் பயணிக்கிற எமது கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
அவ்வாறு நாங்கள் பலமான ஒரு அமைப்பாக இருக்கிற போது எங்களை எந்த வித்த்திலும் எந்த அரசாங்கமும் பயமுறுத்தவும் முடியாது. விலை கொடுத்து வாங்கவும் முடியாது. இப்படியாக கொள்கையில் உறுதியாகவுள்ள நாங்கள் ஒற்றுமையின் வடிவமாக தமிழ்த் தேசிய கூட்டணியாக செயற்படுகிறோம்.
மேலும் அன்று இருந்த தமிழரசுக்கட்சி இன்று இல்லை. ததிழரசுக் கட்சி என்பது இன்று மிகவும் பிற்போக்குத்தனமாக தமிழ் மக்களின் தேசிய உணர்வை சிதைக்கின்ற நிலைமையை
இப்போது உங்களால் பார்க்க கூடியதாக இருக்கிறது. எனவே இந்த விடயங்களை எல்லாம் ஆராய்ந்து சிந்தித்து எமக்கான ஆதரவை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் என்றார்.
Post a Comment