ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு பொதுக்கூட்டங்களின் போது மக்கள் மத்தியில் செல்வது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அரச புலனாய்வு துறை எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறிப்பாக நாட்டில் தற்போது இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள் உள்ளிட்ட சில செயற்பாடுகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதுடன், அந்த பாதாள உலக செயற்பாடுகளின் பின்னணியில் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் பாதுகாப்பு தரப்பினருக்கு உள்ளதாக அறியமுடிகின்றது.
இதனையடுத்து, குறித்த பாதாள உலக செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னைய ஜனாதிபதிகளுக்கு அப்பால் சென்று மக்களை நெருங்கி கூட்டங்களை நடத்தி அவர்களுடன் உரையாடிவருகிறார்.
இந்த நடைமுறை ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என சில விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறியுள்ள போதிலும், இந்த தருணத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் அவரின் பாதுகாப்பை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதன்காரணமாக ஜனாதிபதி மக்களுடன் நெருங்கி பழகுவதை குறைத்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment