ஹபரணையில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றை இடிக்க முடியுமாக இருந்தால்
தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரையினை ஏன் அகற்றப்பட முடியாது ? என கேள்வி எழுப்பியுள்ளார், மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
மீண்டும் ஒரு 83 கலவரம் உருவாக வழிவக்கும் என்கிறார்கள், ஏன் சிங்களவர்கள் காட்டிமிராண்டிகளாகவா இருக்கின்றார்கள் ? அப்படியென்றால் அவர்களை திருப்திப்படுத்தவா இந்த நாடும் சட்டமும் அரசும் இருக்கின்றது ? என சாடியுள்ளார்.
கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டால் கலவரங்கள் ஏன் உருவாகுவதில்லை ? ஏன் என்றால் ஏனைய இனங்கள் பலம் குறைந்த இனங்களாக இருப்பதனால் தொடர்ந்து நசுக்கப்படுகின்றன. இது ஒரு அடக்குமுறை அரசியல்.என அவர் தெரிவித்தார்.
Post a Comment