பணத்திற்காக இனத்தை விற்கும் துரோக எட்டப்பன் கூட்டம் என ரெலோவை கடுமையாக சாடியுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தராகவும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்த விந்தன் கனகரத்தினம் தற்போது தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தி ரெலோவில் இருந்து விலகியமை மற்றும் தமிழரசில் இணைந்து கொண்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ரெலோ அமைப்பில் இணைந்து ஆயுதப் போராட்டத்திலும் அதன் பின்னரான அரசியல் போராட்டத்திலும் என 41 வருடங்கள் தொடர்ந்து அந்த அமைப்பில் பயணித்து வந்திருக்கிறேன்.
ஆனால் நான் சார்ந்திருந்த ரொலோ கட்சியானது ஒரு சிலரின் சுயநலன்களுக்காக அரசியல் சோரம் போய் சொந்த மக்களிற்கே துரோகம் இழைத்து டீல் அரசியல் நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது.
குறிப்பாக ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்திய அவருக்கே எமது கட்சி ஆதரவை வழங்கியது. ஆனால் உண்மையில் ஒரு சிலரின் டீல் அரசியலால் அரசிற்கு சோரம் போய் பொது வேட்பாளருக்கு துரோகம் செய்தது.
அமாவது ரணிலை ஐனாதிபதியாக்குவதற்கு ரணிலுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தது. அதற்கு கையூட்டாக இவர்கள் என்னதைப் பெற்றுக் கொண்டார்கள் என்ற ஆவணம் என் கையில் இருக்கிறது.
இதற்கு முதல் 2023 இல் பெரமுனவினால் ஐனாதிபதியாக ரணிலை நிறுத்திய போது கூட்டமைப்பு டளஸ் ஆதரிப்பதென முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவையும் மீறி டீல் அரசியல் காரணமாக மறைமுகமாக ரணிலை ஆதரித்து வாக்களித்தனர்.
இத்தகைய டீல் அரசியலை செய்தவர் வேறு யாருமல்ல. எமது கட்சியில் இருக்கின்ற ஒருவர் தான். அவர் ஒரு போலி தேசிய வாதி. அவர் கொழும்பில் பாரிய மோசடி செய்தவர். அதுமட்டுமல்லாது பின்கதவு அரசியல் செய்வதில் வல்லவர். யுத்தம் முடியும் வரை மறைந்திருந்து அதன் பின்னர் வந்து அரசியல் டீல் செய்யும் எட்டப்பன்.
அவ்வாறான ஒருவர் தான் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க டீல் செய்து ஒருவருக்கு பத்துக் கோடி பேரம் பேசி அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு ரணிலுக்கான ஆதரவை பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஐனாதிபதி தேர்தலின் போது கூட கட்சியன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வினோ நோதராலிங்கத்தின் பெயரைக் கூறி அந்த டீல் அரசியல் செய்யும் எட்டப்பன் இரண்டு கோடிகளை சுருட்டி கொண்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது கூட எமது கட்சிக்கு வழங்கப்பட்ட ஆசனம் கூட பணத்திற்காக விற்கப்பட்டதாக அறிகிறோம்.
இதுபோன்ற நண்பர் ஒருவருக்கு பார் லைசன்ஸ் கேட்டு அதனையும் பெற்றுக் கொண்டு அதையும் 7 கோடிக்கு விற்றிருக்கிறார். இந்த லைசன்ஸ் வழங்க உதவியவர் தனக்கும் துரோகம் இழைத்துள்ளதாக என்னுடன் மட்டுமல்ல நான் சார்ந்திருந்த அந்தக் கட்சியின் மிக முக்கியஸ்தர்கள் பலருடனும் அழுது புலம்பியுள்ளார்.
இவ்வாறு வினோவின் பெயரை பயன்படுத்தி 2 கோடியெம் பார் லைசன்ஸ் என்று கூறி எ8 கோடியும் அதேபோன்று ரணுலுக்கு ஆதரவு என பல பல கோடிகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.
இத்தகைய மோசடிகள் தெடர்பில் வினோவும் பீர்லைசனஸ் லியோவும் என்னுடனும் கட்சி சார்ந்த ஏனைய பலருடனும் தொலைபேசிகளில் கதைத்திருக்கிறார்கள்.
இவ்வாறாக பின்கதவு அரசியல் டீலராக பல கோடிகளை ஏமாற்றி பெற்றுக் கொண்டு தமிழினத்திற்கு எதிராக செய்த துரோகத் தனங்களை மறுதலிக்க முடியுமா?
இவ்வாறாக தரகர் அரசியல் செய்து பல கோடீகளை ஆட்டையை போட்டதையும் இவை எல்லலாம் அளிந்தும் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அதற்கு உடந்தையாகவே தலையாட்டிகள் போன்று கட்சித் தலைமை இருக்கிறது.
இவ்வாறாக தமிழ் மக்களை ஏமாற்றி மோசடி செய்து மண்ணையும் மக்களையும் விற்றுப் பிழைக்கும் ஈனப்பிறவிகள் அல்லது தமிழின துரோகிகளை விரட்டியடிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் இவர்களைப் போன்று வடகிழக்கில் உள்ள போலித் தேசியவாதிகளை தேர்தல்களில் தோற்கடித்து விரட்ட வேண்டும்.
இவை மட்டுமல்ல 1983 கலவரத்தில் பல ஆயிரக் கணக்கான மக்களை கொன்றொழித்த கட்சி ஜேவிபி தான். அதன் பின்னர் ஒன்றாக இருந்த வடக்கு கிழக்கையும் கூட இரண்டாக பிரித்த கட்சியும் இந்த ஜேவிபி தான். ஆனால இந்தக் கட்சியின் பட்ஜெட்டுக்கே தமிழ்த் தேசியம் பேசும் எம்பி ஒருவரும் வாக்களித்துள்ளார்.
உண்மையில் இந்த ஜேவிபி அரசியல் கைதிகளை விடுவித்தார்களா? காணாமல் போனவர்களுக்கு என்ன செய்தீர்கள்? பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கினார்களா? காணியை விடுவித்தார்களா? அரசியல் தீர்வை தருவோம் என கூறினார்களா?
இப்படி தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வை வழங்காத அதுவும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகிற இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களிக்க வேண்டும். ஆனாலும் ஒருவர் வாக்களித்துள்ளார் என்றால் அது எவ்வளவு பெரிய வெட்க்க்கேடானது.
குறிப்பாக தமிழீழம் கேட்டோம் இதன் பின்னர் சமஷ்டி கேட்டோம். ஆனால் இப்ப வடக்குக்கு நிமி ஒமுக்கினாலே போதும் என்ற மிக மோசமான நிலையில் இருக்கிறோம். வடக்குக்கு நிதி ஒதுக்கீடு வந்ததற்காக வாக்களிப்பது மிகவும் கேவலமானது.
இவ்வாறு நான் சார்ந்திருந்த கட்சியின் பல்வேறு நடவடிக்கைகளிலும் எனக்கு உடன்பாடில்லை. அதனை எமது மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் இவை எல்லாம் எமது மக்களுக்கு விரோதமானவையாகவே இருக்கிறது.
இதனாலேயே மக்களுக்காக நான் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளேன். ஆனால் அந்தக் கட்சியிலும் சில குறைகள் பிரச்சனைகள் இருந்தாலும் அதனை சீர் செய்து தொடர்ந்து தமிழரசுடனேயே பயணிப்பேன்.
மேலும் இந்த இரசாங்கம் இப்போது பட்டலந்த வதைமுகாம் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லலை.
ஆனால் இந்த ஐனாதிபதி அனைத்து இன மக்களையும் சம்மாக பார்க்கிறார் என்றால் அல்லது முழுநாட்டிற்கும் ஐனாதிபதி என்றால் தமிழ் மக்களுக்கு நடந்தவற்றுக்கும் நீதி நியீயம் வழங்க வேண்டும்.
அதற்கு அவர் தாயாரா? எனக் கேட்கிறோம்.
பட்டலந்த விவகாரத்தை இப்போது பேசுவது தேர்தல் நாடகம். தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை உள்ளிட்ட அத்தனை படுகொலைகளுக்கும் நீதி விசாரணை வேண்டும் என கோரினார்.
Post a Comment