இவ்வாறு ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்..
அதனால் இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்து தமிழர்களையே தெரிவு செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அனுர ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமென்பதை எமது மக்களுக்கு கடந்த நேர்தலிலும் நாங்கள் கூறியிருந்தோம். அதாவது ஜேவிபி, அனுரகுமார, தேசிய மக்கள் சக்தி என்பது எல்லாம் யார் என்றும் இவர்கள் என்ன என்ன செய்வார்கள் என்றெல்லாம் கூறியிருந்தோம்.
அதிலும் அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அனுரகுமார எதனைக் கூறினாலும் அவர் எதனையும் நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதையும் அவ்வாறு நடைபுறைபடுத்துவது கஸ்ரம் என்றும் கூறியிருந்தோம்.
அதைப்போலவே அந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. ஏனெனில் இது தான் நடக்கும் என்பது எங்களுக்கு முன்னரே தெரிந்து இருந்தது.
இதனை தான் நாங்கள் முன்னர் கூறிய போது கவனத்தில் எடுக்கீத மக்கள் பலரும் அதனை தற்போது நேரடியாகவே தெரிந்து கொண்டுள்ளனர். இதனால் தாங்கள் மிகப் பெரிய ஒரு தவறைச் செய்துள்ளோம் என இப்போது உணர்ந்துள்ளார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது இன்றைய கால சூழலில் மிக அவசியம். ஆகையினால் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகிறோம்.
அதனால் பெரும்பான்மையான மக்கள் எமக்கு ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு ஆதரவை வழங்குவதன் ஊடாகவே எமது சபைகளை நாமே ஆள முடியும்.
இதனைவிடுத்து தமிழ் மக்கள் இங்கு சபைகளை அமைக்கத் தவறினால் மீண்டும் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்று ஆளும் கட்சியான ஜேவிபி ஆட்சியமைக்கும் நிலைமை ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இத்தகைய ஆபத்துக்களை உணர்ந்து முக்கியமான இந்த தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்காக திரண்டு எமக்கு வாக்களிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
கடந்த தேர்தல் காலத்திலும் சரி இந்ததத தேர்தல் காலத்திலும் கூட தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை மட்டுமே ஜேவிபியினர் வழங்கி வருகின்றனர்.
உண்மையில் அன்று வாக்குறுதியளித்த எவையும் இதுவரை அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான நிலைமையில் தற்போது மேலும் பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
ஆகவே பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். கடந்த தேர்தலில் நம்பி வாக்களித்து ஏமாற்றமடைந்தது போன்று இனியும் நம்பி ஏமாற வேண்டாம்.
எனவே ஓட்டு மொத்த தமிழ் மக்களும் தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழ்த் தேசியத்துடன் பயணிக்க வேண்டியது அவசியம். அதற்கமை தமிழ்த் தேசிய கொள்கையுடன் பயணிக்கும் எமது கூட்டணிக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
.jpg)
Post a Comment