ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்கு இந்தியா மீது 25 சதவிகிதம் கூடுதல் வரி- டிரம்ப் அறிவிப்பு - Yarl Voice ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்கு இந்தியா மீது 25 சதவிகிதம் கூடுதல் வரி- டிரம்ப் அறிவிப்பு - Yarl Voice

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்கு இந்தியா மீது 25 சதவிகிதம் கூடுதல் வரி- டிரம்ப் அறிவிப்பு




 இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கிவந்தது. இதனால், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடன் கூடுதலாக வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதலாக அபராதம் விதிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார். முதலில் ஆகஸ்ட் 1 முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு பிறகு 7 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று டிரம்ப் அளித்த பேட்டியில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அந்நாடு நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை மேலும் கடுமையாக்க போவதாக வும் கூறியிருந்தார். இதன் மூலம் அடுத்த24 மணி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ளும்படி நெருக்கடி கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், தண்டனையாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக இன்று (06) ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்ட வரி மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post