இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கட்சியின்
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான விடயங்களை கையாள என கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர் கொண்ட குழுவும் ஒன்று கூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடின.
இக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், து.ரவிகரன், க.கோடீஸ்வரன், ப.சத்தியலிங்கம், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் எம்பி த.கலையரசன், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கே.துரைராஜசிங்கம் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment