வடக்கு மாகாண வர்த்தக, வணிப அமைச்சர் திருமதி அனந்தி சசிதரனுக்கு வர்த்தக துறை முன்னேற்றும் நோக்கம் இல்லை என்று யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே.விக்னேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்த அமைச்சருக்கு தனது துறைசார்ந்த வர்த்தக தொழில்துறை மன்றம் என்று ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ளது என்பது தெரியுமா என்றும் தமக்க சந்தேகம் உள்ளது அமைச்சரை சாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக சந்தை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை கிறின்கிறாஸ் கோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்களினால் குறித்த நிகழ்வு வடக்கு மாகாண சபையினை புறக்கணித்து நடத்துவதாக வடக்கு மாகாண வர்த்தக வணிப அமைச்சர் திருமதி அனந்தி சநிதரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே மன்றத்தின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இக் கண்காட்சி வருடா வருடம் நடாத்தப்படுகிறது. இதில் வடக்கு மாகாண சபைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நாங்கள் அழைத்துள்ளோம். ஏனைய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வடமாகாண சபை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றக் கொள்ள முடியாது. வடக்க மாகாண சபைக்கான வர்த்தக வணிக அமைச்சருர் பதவி ஏற்று எத்தணை மாதங்கள் கடந்து விட்டது. இன்றுவரை அவர் வர்த்தக முன்னேற்றம் தொடர்பில் என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தக தொழித்துறை மன்றம் என்று ஒன்று உள்ளது என்பது அமைச்சருக்கு தெரியுமா என்றுகூட எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Post a Comment