முள்ளிவாய்க்கால் கிழக்கில் பயனற்ற பாலங்கள் பயணிக்க முடியாத நிலையில் மக்கள் - Yarl Voice முள்ளிவாய்க்கால் கிழக்கில் பயனற்ற பாலங்கள் பயணிக்க முடியாத நிலையில் மக்கள் - Yarl Voice

முள்ளிவாய்க்கால் கிழக்கில் பயனற்ற பாலங்கள் பயணிக்க முடியாத நிலையில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்க்கால் கிராமத்தில் பாலங்கள் உரிய முறையில் நிர்மானிக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 7 பாலங்கள் வீதியில் உயரத்தை விட அதிக உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளதோடு மக்களின் வீடுகளுக்கு நேராக அமைக்கப்பட்டும் உள்ளது.

குறித்த பாலங்கள் நிலத்தை தோண்டி நீர் ஒடக்கூடியவாறு வைக்கப்படாது வீதியில் சிறிய அளவு தோண்டி வீதியின் மேலாக வைத்துள்ளமையால் வீதியை விட அதிக உயரமாக காணப்படுகின்றன. இதனால் அப் வீதியூடாக போக்குவரத்து செய்ய முடியவில்லை.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்க தெரியப்படுத்தியுள்ள போதும், பாலங்கள் சீர் செய்யப்படவில்லை என்றும் இப் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post