ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'! - Yarl Voice ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'! - Yarl Voice

ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'!

ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'!
ரீமேக் பக்கம் மொத்தமாக கவனத்தை திருப்பிய உதயநிதி.. அடுத்த ஆபரேஷன் 'ஹேப்பி வெட்டிங்'!
'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி! 


அடுத்தடுத்து ரீமேக் படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தி ரீமேக்கான 'மனிதன்' படத்தை தொடர்ந்து தற்போது மலையாள படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' ரீமேக்காக 'நிமிர்' என்கிற படத்தில் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடித்துள்ளார் உதயநிதி. வரும் ஜனவரி 26-ம் தேதி 'நிமிர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'ஹேப்பி வெட்டிங்' என்கிற படத்தின் ரீமேக்கிலும் உதயநிதி நடிக்க இருக்கிறார்.

'ஹேப்பி வெட்டிங்' படத்தை இயக்கிய ஓமர் லுலுவே தமிழிலும் அதை இயக்கவுள்ளாராம். சமீபத்தில் தானும் உதயநிதியும் இணைந்து எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஓமர் லுலு. கடந்த 2016-ம் ஆண்டு மலையாள சினிமாவின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்படும் 'ஹேப்பி வெட்டிங்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 20 கோடி வசூலித்தது. சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து, அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக சொல்லியிருந்தார் இயக்குனர் ஓமர் லுலு. இப்படத்தின் ரீமேக்கில் தான் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. 'நிமிர்' படத்தில் உதயநிதி சிறப்பாக நடித்திருப்பதாக படக்குழுவினர் பாராட்டி வரும் நிலையில், ரீமேக் படங்களைக் குறி வைத்து வருகிறார் உதயநிதி. இப்படத்தின் மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post