![]() |
| அண்ணன் சூர்யாவுக்காக 'விவசாய சிங்கமாக' மாறிய கார்த்தி |
கார்த்தி காவல் துறை அதிகாரியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கிறார்.
படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் கார்த்தி விவசாயியாக நடிக்கிறார். கார்த்திக்கும் கிராமத்து கதாபாத்திரத்திற்கும் எப்பொழுதுமே நல்ல பொருத்தம் உண்டு. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்புகிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில் கார்த்தியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment