யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞரை சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப் படையினரின் பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது விசேட அதிரடிப் படையினர் சார்பில் மன்றில் தோண்றிய சட்டத்தரணி மோகனதாஸ் அவர்களுக்கான பிணை விண்ணப்பத்தினை நீதவானிடம் சமர்ப்பித்திருந்தார்.
இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இன்னமும் முடிவுறவில்லை என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிவித்தலை அடுத்து, அவர்களுக்கான பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment