யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
யாழின் முக்கிய சந்தையாகக் கருதப்படும் திருநெல்வேலி பொதுச் சந்தையில் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ பச்சை மிளகாய் 100- 120 ரூபா வரையும் கத்தரி 80-100 ரூபா வரையும் கரட்-80 ரூபா, புடலங்காய்- 70-80 ரூபா வரையும் பீற்ரூட்- 50-60 வரையும் உருளைக்கிழங்கு - 60 ரூபா, பூசணி- 50 ரூபா, தக்காளி- 40-50 ரூபா வரையும் முள்ளங்கி 40-50 ரூபா வரையும் கோவா 40- 50 ரூபா வரையும் கருணைக்கிழங்கு 40- 50 ரூபா வரையும் மரவள்ளிக்கிழங்கு- 30-40 ரூபா வரையும் விற்பனை செய்யப்பட்டன.
இதேபோன்று யாழ்.மாவட்டத்தின் ஏனைய சந்தைகளிலும் மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளன.
எனினும் பயற்றங்காய், பாகற்காய், லீட்ஸ், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment