த.தே.கூ வேட்பாளருக்கு எதிராக பொலிஸில் அனந்தி முறைப்பாடு - Yarl Voice த.தே.கூ வேட்பாளருக்கு எதிராக பொலிஸில் அனந்தி முறைப்பாடு - Yarl Voice

த.தே.கூ வேட்பாளருக்கு எதிராக பொலிஸில் அனந்தி முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கு  எதிராக அக் கட்சியின் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கூட்டமைப்பின் சார்பில் வலிகாம்ம் தென் மேற்கு பிரதேச சபையில் 4 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்  ஒருவருக்கு எதிராகவே வட்டுக்கோட்டை பொலிஸில் நிலையத்தில் அமைச்சர் முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

மேற்படி வேட்பாளர் அவரது முகநூலில் கீழ்த்தரமான முறையில் தன்னை விமர்சித்தாக குற்றஞ்சாட்டியே அவருக்கு எதிராக நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை ,ந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இவ் முறைப்பாட்டையடுத்து குறித்த வேட்பாளர் சமரசம் செய்வதற்கு முயற்சித்த போதும் அதனை அமைச்சர் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் நேற்றையதினம் பொலிஸார் குறித்த வேட்பாளரை அழைத்த பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் அமைச்சர் அனந்தி சசிதரனும் குறித்த வேட்பாளரும் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள்; என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post