புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டு ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட போதும், பொலிஸார் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் உள்ள பூபாலசிங்கம் இந்திரகுமார் சார்பில் சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணி எழுத்துமூல விண்ணப்பம் ஒன்றை செய்துள்ளார்.
நேற்று குறித்த வழக்கானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதே மேற்படி விண்ணப்பமானது செய்யப்பட்டிருந்த்து.
இதன்போது மன்றில் சந்தேகநபர் சார்பாக முன்னிலையான சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணி குறித்த நபருக்கு ஏன் பிணை வழங்குவதை பொலிஸார் மறுக்கூடாது என்பது தொடர்பாக எழுத்து மூல விண்ணப்பம் ஒன்றை செய்திருந்தார்.
இதனையடுத்து குறித்த எழுத்து மூலமான விண்ணப்பத்திற்கான கட்டளையை வழங்குவதற்காக இவ் வழக்கு விசாரனையை எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கவும் அதுவரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

Post a Comment