![]() |
மாலத்தீவில் அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு |
மாலத்தீவில் கடந்த 5ம் தேதி 15 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவில் எதிர்க்கட்சிகள் எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும், சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்து விட்டார்.
மேலும், ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவசரநிலை பிரகடனம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் அப்துல்லா யாமீன் கோரிக்கை விடுத்தார். இதற்கு 38 எம்.பி.க்கள் ஒப்புதல் அளித்ததையடுத்து, அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாலத்தீவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே அதிபரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Post a Comment